மனிதத்தின் சாயல் கொஞ்சமேனும் எஞ்சியிருக்கும் எவரும் கேட்டாலே மன பதைக்கும் படு பாதக செயல் ஒன்று உத்திரப் பிரதேச மாநிலத்தின் லகீம்பூர் கேரி நகரில் அக்டோபர் 3-ஆம் தேதியன்று பட்டப் பகலில் ஈவிரக்கமில்லாமல் நடந்தேறியது.
விவசாயிகளுக்கான மசோதா என்றழைக்கப்படும் மசோதாவுக்கெதிராக ஒரு நிகழ்வில் பங்கெடுத்து திரும்பிக் கொண்டிருந்த விவசாயிகள் கூட்டத்திடையே ஒரு வேன் தாறுமாறாக ஒடி எதிர்ப்பட்டவர்களை தூக்கி வீசிவிட்டு சென்றது. எட்டு பேர் இறந்தார்கள். வேனில் மத்திய துணை மந்திரி அஜய் மிஷ்ராவின் மகன் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
எல்லாமே அரசியலாகிவிட்ட காலத்தில் இப்படி ஒரு நிகழ்வின் அரசியல் பாரபட்சங்களூடாகவேத் தான் பார்க்கப்படுகிறது. நடந்தது விபத்து, என்ன நடந்தது என்று விசாரனை செய்து முடிவு தெரியும் வரை எதுவும் திட்டவட்டமாக எதிர்க்க முடியாது, பேரணி சென்றவர்கள் கல் வீசியதற்கு பின் ஓட்டுனர் நிலைத் தடுமாறி ஓட்டினார் என்றெல்லாம் பாஜக வாக்காளர்கள் வாதிட்டார்கள். மோடி, பாஜக என்றாலே சீற்றம் கொள்ளுவோர் இப்போதும் சீற்றம் கொண்டார்கள். பொதுவாக உண்மை இரண்டு அதீத எல்லைகளுக்கு நடுவே இருக்கும் என்பார்கள். இந்நிகழ்வில் அது பொய்த்தது. உண்மை ஒரு பக்கமே இருக்கிறது. அதை மறுப்பதில் அரசியலும் மனச் சாய்வுகளும் இருக்கிறது. இந்நிகழ்வுக்குள் மேலும் செல்லும் முன் ஓர் அமெரிக்க உதாரணம்.
ஓர் அமெரிக்க நிகழ்வு
வன்முறை நடந்த அன்று மாலை டொனால்ட் டிரம்ப் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். பத்திரிக்கையாளர்கள் கேள்விகளால் துளைக்க டிரம்ப் எல்லாப் பக்கமும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள் என்று கூச்சலிட்டு பத்திரிக்கை சந்திப்பே களேபரத்தில் முடிந்தது. அவர் கட்சி மூத்தவர்களும், அமைச்சரவை அங்கத்தினர்களுமே ஜனாதிபதி இனவாதத்தை சந்தேகத்துக்கு இடமில்லாமல் எதிர்க்காதது பற்றி எரிச்சலும் கோபமும் கொண்டனர். அடுத்த நாள் டிரம்ப் தான் இனவாதத்தை நியாயப்படுத்தவில்லை என்று மீண்டும் ஒரு காணொளி வெளியிட நிர்பந்திக்கப்பட்டார். இதெல்லாம் என் நினைவுக்கு வந்தது. நாடுகள், சமூகங்கள் கடந்து வெறுப்பரசியல் பொதுக் கூறுகள் உடையது என்பதே என் நம்பிக்கை. டொனால்ட் டிரம்ப் கூட அந்த காரோட்டியை மோசமனாவன் என்று வர்ணித்தார்.
கேள்விகள்
தேர்தல் வெற்றியின் எல்லைகள்
பா.ஜ.க.வின் ஆட்சிக்குப் பின் மசோதாக்கள் பாராளுமன்ற குழுக்களுக்கு அனுப்பி கருத்துக் கேட்டு அதன் பின் பாராளுமன்ற ஓட்டெடுப்புக்கு கொண்டு வருவது வெகுவாக குறைந்து விட்டதை அரசியல் பார்வையாளார்கள் ஜனநாயகத்துக்கு ஊறு விளைவிக்கும் போக்கு என்கிறார்கள்.
தொடர் போராட்டம் முறையா?
மற்ற மாநிலங்கள் ஒழுங்கா?
உத்திரப்பிரதேசம் குறி வைக்கப்படுகிறதா?
மிகக் கொடூரமாக வண்புணர்வு செய்து அதை விட கொடூரமாக உடல் சிதைக்கப்பட்ட பெண்னின் வழக்கை மூடி மறைக்க நினைத்தது, கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்று இஸ்லாமியரின் படங்களை சுவரொட்டிகளாக ஒட்டியது, மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறந்ததை அம்பலப்படுத்திய மருத்துவரை வேட்டையாடியது, தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் முதல் வேட்பாளர் வரை அப்பட்டமான மதவாத பேச்சுகள் பேசுவது என்று அடுக்கிக் கொண்டே போகலாம் உத்திரப் பிரதேசத்தின் வரலாற்று சிறப்புகளை. நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் கொஞ்சமேனும் அற உணர்வுள்ளவர்கள் மனம் கூசும் நிகழ்வுகள், பல நிகழ்வுகள் கேட்டாலே குலை நடுங்க வைப்பவை. எதற்கும் அரசிடமிருந்தும் ஆதரவாளர்களிடமும் எந்த பச்சாதாபமுமற்ற எதிர்வினைகளே பதில்கள். இப்போது கூட டிரம்ப் காண்பித்த எள் முனையளவு குற்ற உணர்வுக் கூட முதல்வருக்கோ, பிரதமருக்கோ இல்லை.
மிக முக்கியமாக யோகி ஆதித்யாநாத் மோடியின் அடுத்த வாரிசாக உருவாகலாம் என்று பாஜக ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் கணிக்கிறார்கள். ஒரு தரப்பு அப்படி நடக்க வேண்டுமே என்றும் இன்னொரு தரப்பு அப்படி நடந்தால் மொத்தமாக இந்தியா தடம் புரளும் என்று அச்சப்படுபவர்கள். உத்திரப் பிரதேசம் புதிய இந்தியாவுக்கான முன் மாதிரியாகுமோ என்பதே அம்மாநிலத்தின் மீது அத்தனை கவனம் குவியக் காரணம்.
இந்த பாதக நிகழ்வில் உயிர் இழந்தோருக்கு ஆறுதல் சொல்ல, அரசியல் காரணங்களுக்காகவும், வரும் எதிர்கட்சியினரை கைது செய்யும் மும்முரத்தில் ஒரு சதவீதம் கூட குற்றம் சாட்டப்படும் அமைச்சர் மகனை கைது செய்வதில் அரசு காண்பிக்கவில்லை.
உத்திரப் பிரதேச மாடல்
கீழிருக்கும் காணொளி யோகி ஆதித்யாநாத் எம்.பி.யாக இருந்த போது பேசியதை கேள்விக் கேட்கும் நிகழ்ச்சி. உத்திரப் பிரதேச மாநில தேர்தலுக்கு முன் இவர் முதல்வராக வரக் கூடும் என்கிற தருணத்தில் அளித்த பேட்டி. 17-ஆவது நிமிடத்தில் இஸ்லாமியர் பற்றி இவர் பேசியது அப்பட்டமான வன்முறைத் தூண்டும் பேச்சு. அது பற்றிக் கேட்டதற்கு மிக எளிய புண்ணகையுடன் பதில் அளிக்கிறார். நிகழ்வு நடக்கும் இடம் ஒரி தொலைக் காட்சி செட், அங்கு அமர்ந்திருக்கும் பலர் நடுத்தர படித்த வேலைக்குப் போகும் வர்க்கத்தினர். யோகியின் பதிலுக்கு கூட்டம் பலத்த கைத் தட்டுகிறது. நாளை இவர் பிரதமாரகவும் ஆகக் கூடும். இப்போது சொல்லுங்கள் ஏன் இவர் மாநில நிகழ்வில் தேசிய அளவில் பேசப்படக் கூடாது.
மீண்டும் சொல்கிறேன் சர்வதேச நாளிதழ்களிலும் ஊடகங்களிலும் யோகி பற்றி எதிர்மறையாகப் பேசப்படுவது அவர் கட்சியினரை உசுப்பேற்றி அதனால் வாக்களிக்கிறார்கல் என்பது வெற்று சால்ஜாப்பு. யோகிக்கு வாக்களிப்பவர்கள் ஊடக கருத்துகளாலெல்லாம் உந்தப் படவில்லை மாறாக வெறுப்பு, வெறுப்பினால் மட்டுமே உந்தப் படுகிறார்கள். BJP voters should own up their vote and many actually do.
ஆக, ஏன் இப்படி ஒரு கொலைப் பாதக செயல் நடந்தேறியது?
பா.ஜ.க.வும் தேசமும் ஒன்றே
பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் மாநில அரசியலாக பார்க்கப்படாததற்கு இந்த பா.ஜ.க.வும் தேசமும் ஒன்று என்கிற பார்வையும் காரணம். தேசிய எதிர்க் கட்சியினர் எதற்கு உத்திரப்பிரதேசத்துக்கு விரைகிறார்கள் என்று கேட்பவர்கள் அமித் ஷா ஏன் ஐதராபாத் உள்ளாட்சி தேர்தலில் அதீத கவனம் செலுத்துகிறார், தேஜஸ்வி ஏன் தமிழ் நாட்டில் பிரச்சாரம் செய்கிறார் என்று கேட்பதில்லை. பா.ஜ.க.வை பொறுத்தவரை மொத்த தேசத்தில் எல்லா தேர்தலிலும், அது முனிசிபாலிட்டி தேர்தலாக இருந்தாலும், வெற்றிப் பெற்று தங்கள் இந்துத்துவ கொள்கைகளை நிலைநிறுத்துவதே குறிக்கோள். அதனால் தான் உத்திரப் பிரதேசமாக இருந்தாலும் மோடி மீதே விமர்சனம் குவிகிறது.
மோடியின் ஆளுமை அவர் பா.ஜ.க.வின் ஒவ்வொரு அசைவையும், நாடு முழுவதும், தன் கட்டுக்குள் வைத்திருக்கிறார் என்கிற பிம்பத்தைக் கொடுக்கிறது. அதனாலேயே எந்த பா.ஜ.க ஆளும் அல்லது அரசில் அங்கம் வகிக்கும் மாநிலத்தில் எது நடந்தாலும் அது மோடியின் மீது கவனத்தை குவித்து எல்லா பிரச்சனைகளையும் தேசிய மயமாக்குகிறது.
இதோ இன்று வரை மாநில முதல்வரோ, பிரதமரோ நடந்திருக்கும் நிகழ்வு பற்றி வருத்தமோ பத்திரிக்கையாளர் சந்திப்போ நிகழ்த்தவில்லை. மோடியோடு ஒப்பிட்டால் டொனால்ட் டிரம்ப், பத்திரிக்கையாளரை சந்திப்பதில், பெட்டர்.
காந்தி தேசமா கோட்ஸே தேசமா?
பாரதியின் வரியைக் கொஞ்சம் மாற்றி “விதியே, விதியே, இந்தியச் சாதியை என் செய்ய நினைத்தாய்?” எனக் கேட்கும் துர்பாக்கிய நிலையிலிருக்கிறோம்.
பி.கு: இக்கட்டுரையின் முதல் பிரதி "சமயம்" இணைய இதழில் வெளியானது. இங்கு சில மாற்றங்கள் செய்திருக்கிறேன். https://tamil.samayam.com/latest-news/india-news/lakhimpur-kheri-incident-and-its-aftermaths-are-deeply-disturbing/articleshow/86859974.cms
References:
3. https://en.wikipedia.org/wiki/Unite_the_Right_rally
5. https://indianexpress.com/article/explained/who-is-ajay-mishra-union-mos-lakhimpur-kheri-7555981/