Friday, March 11, 2022

நேரு, கே.ஆர்.நாராயணன், பூவண்ணன்: வரலாற்று திரிபுகளின் ஊர்வலம்

நண்பர் பூவண்ணனின் காணொளி ஒன்று காண நேர்ந்தது. குலுக்கை யூட்யூப் தளத்தின் கதாநாயகன் பூவண்ணன் தான். நிறைய நேர்காணல்கள் இருக்கின்றன. உக்ரைனில் இருந்து மாணவர்களை மீட்டதை பற்றிய காணொளியை ஆவலுடன் கேட்டேன்.

போர் என்றாலே நாசம் தான். அது உயிர்களை பாதிக்கக் கூடியது என்பதை நெகிழ்வான ஓர் உதாரணத்தோடு விளக்கி இருக்கிறார். போரை சமூகம் வியந்து நோக்கும் ஹீரோயிஸமாகக் காண்பதை நக்கலடிக்கிறார். நியாயம் தான். என்ன கூடவே இந்த புறநானூற்றுப் பெருமைப் பேசியதெல்லாம் திராவிட மேடைகள் தாம், அதை மறந்துவிட்டார்.


இந்திய வெளியுறவுத் துறையில் நிலவும் ஆதிக்க மனோபாவம் குறித்து சொல்லும் போது அத்துறை ஆதிக்க சாதியினரால் நிரப்பட்டதாலேயே தான் பூடான் போன்ற நட்புறவுக் கொண்ட ஆனால் சின்ன நாடுகளை அவமதிப்பதும் நம்மோடு நட்புறவில்லாத சீனா போன்ற நாடு பெரிய நாடாக இருப்பதாலுமே பணிந்துப் போகிறார்கள் என்கிறார். இதில் சாதிய மனோபாவம் தாண்டி யதார்த்த நிலையைப் பற்றி பூவண்ணன் கண்டு கொள்ளவே இல்லை. எண்ணிக்கையில் அதிகம் இருக்கும் இடை நிலை சாதியினரை திராவிட கட்சிகள் எப்படி கையாள்கின்றன என்றும் விரித்துப் பேசியிருக்கலாம்கலாம்கலாம்


அவ்வுரையில் என்னை இன்று எழுத வைத்திருப்பது நேரு பற்றிய ஒரு தகவலும் பூவண்ணனின் சாதியப் பார்வையும். லண்டனில் ஹரால்டு லஸ்கியிடம் பயின்ற நாராயணன் 1948-இல் இந்தியா திரும்பினார். அவர் நேருவை சந்தித்தார், நாராயணனை லாஸ்கி புகழ்ந்து எழுதியக் கடிதத்தை படித்த நேரு அவரை வெளியுறவுத் துறைக்கு பரிந்துரைக்க சில அதிகாரிகள் நாராயணின் சாதியைப் பார்த்து நிராகரித்ததாகவும் பின்னர் நேரு நாராயணனை ஜீனியர் போஸ்டில் நியமித்ததாகவும் பூவண்ணன் சொல்கிறார். அக்காலத்தில் நியமணமான மற்றவர்களைப் பாருங்கள் என்கிறார். அதோடு நிறுத்தவில்லை நேருவின் ஜாதியை சுட்டாமல் சுட்டிஅவர் அப்படித்தான், அவர் உணவு, சுற்றத்தார் எல்லாம் அந்த வகை தான்என்று நேருவை பிராமணர் என்பதாலேயே விமர்சிக்கிறார் பூவண்ணன்.


முதலில் பூவண்ணன் சொன்னதில் நிஜமும் உண்டு. நீலகண்டன் மாதிரி இது ஒரு உத்தி. சிறு உண்மையை மையமாக வைத்து பெரும் பொய்களை வலைப் பின்னுவது. நேருவின் காலத்தில் நியமிக்கப்பட்ட, அதுவும் நாராயணன் பணி கேட்டு வந்த காலத்தில், இரண்டு தூதுவர்கள் விமர்சனத்துக்குட்பட்டவர்களே. ஒன்று, விஜயலக்‌ஷ்மி பண்டிட், இன்னொன்று சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். இருவரும் பிராமணர்கள், இருவரும் நேருவும் நெருக்கமானவர்கள். விஜயலக்‌ஷ்மி அடித்த கூத்துகள் பற்றி குஷ்வந்த் சிங் பின்னாளில் எழுதினார். சரி, இவர்கள் மொத்தமாக தகுதியே அற்றவர்களா எனில் அதுவும் இல்லை. கவனிக்கவும் வெளியுறவுத் துறைக்கு துறை சார்ந்த வல்லுனர்களை உருவாக்கவே IFS- நேரு மாற்றி அமைத்தார். 1948 வரை பிரதமரின் நேரடி நியமன முறையும் அதற்கு பின் அதிகாரிகளின் பரிந்துரை முறையும் நடைமுறைக்கு வந்தது


விஜயலக்‌ஷ்மி, ராதாகிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் கொஞ்சமேனும் நிர்வாக அனுபவம் உண்டு, 1948-க்கு முன்பே. நாராயணன் அப்போது தான் படிப்பை முடித்த மாணவர். அத்தகையவர் எந்த முன் ஆறிமுகமுமில்லாமல் நாட்டின் பிரதமரை சந்திக்க முடிந்திருக்கிறது. பிரதமரும் அவர் திறமையானவர் என்று அடையாளம் கண்டு கொண்டார். நிச்சயம் அதிகாரிகளின் பார்வையில் நாராயணனின் சாதி உறுத்தி இருக்கும்

நாராயணன் ஒன்றும் சாதாரண போஸ்டுக்கு போகவில்லை. வெளியுறவுத் துறையில் “attache” என்பது ஜூனியர் போஸ்ட் அல்ல. 1948-இல் அப்பதவியில் ஆரம்பித்த நாராயணன் அடுத்தடுத்து பதவிகளில் அமர்கிறார். 1953-இல் First Secretary High Commission of India to United Kingdom. தொடர்ந்து பதவிகள் நாராயணனுக்குக் கிடைக்கிறது. இந்திரா காந்தியின் காலத்தில். ஜே.என்.யூ பல்கலைக் கழக துணை வேந்தர் பதவி, பிறகு அமெரிக்காவுக்கு தூதுவர் என்று நேருவைத் தொடர்ந்து இந்திராவின் காலத்திலும் நாராயணின் தகுதியை மதித்து பதவிகள் தரப்பட்டன.


நேருவைப் பற்றி நாராயணன் எப்போதும் உயர்வாகவே பேசியிருக்கிறார். 1987-இல் “Images and Insights” என்று நாராயணன் எழுதி வெளியிட்ட புத்தகத்தில் ஒரு கட்டுரையின் தலைப்பு, “Nehru: A wonderful human being”. Here is Narayanan about meeting Nehru for the first time, “It was an overwhelming experience of refined kindness and encouragement for a young man on the threshold of his career. He asked innumerable questions, some of them shrewdly calculated to elicit information about my own politics. …I said goodbye and was walking away in a state of mild excitement….Here was the Prime Minister of India sparing a thought for a young man’s career even though the latter had not taken advantage of a magnificent opportunity to raise the issue”. Narayanan has mild criticisms too of Nehru era focusing on legislative means for social reforms. 


 பர்மாவில் பணியாற்றும் போது அந்நாட்டுப் பெண்ணை விரும்பி மணம் செய்தார் நாராயணன். அது விதிகளுக்குப் புறம்பானது. நேரு தலையிட்டு விதி விலக்களித்தாராம். 1980-இல் நாராயணன் அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்ட போது இந்தியாவில் இருந்த அமெரிக்க தூதுவர் ஆர்ச்சர் பிளட் (Archer Blood, “The Blood Telegram” was by him during Bangladesh crisis) நாராயணன் பற்றி, “கடுமையான உழைப்பாளி, புத்திசாலிஎன்று அமெரிக்காவுக்கு குறிப்பு அனுப்பினார். ஆனால் நாராயணனும் இந்திரா காந்தி போன்றே அமெரிக்கா பற்றி எதிர்ப்புணர்வுக் கொண்டிருக்கக் கூடும் என்கிறார். நாராயணன் பொது வெளியில் நன்கறியப்பட்டவராக இருந்திருக்கிறார். பெருமளவு நேரு, இந்திராவுடனான உறவால். அவ்வுறவை பிளட்டும் குறிப்பிடுகிறார்.


உண்மைகள் இப்படி இருக்க பூவண்ணன் சாதியக் காழ்ப்புடன் நேருவை சாதியவாதியாக கட்டமைக்கிறார். மேலும் அந்த நேரு பூவண்ணன் சொல்வதுப் போல் சாதி சார்ந்த உணவுப் பழக்கம் உள்ளவரல்ல. புலாலும் மதுவும் நேருவுக்கு அந்நியமல்ல. நேருவின் அமைச்சரவையில் மிக இள வயது அமைச்சர் பாபு ஜகஜீவன் ராம். ஜகஜீவன் முக்கியமான தொழிலாளர் நலன் அமைச்சரவையை நிர்வகித்தார். அம்பேத்கரை பற்றி சொல்லவும் வேண்டுமோ? அம்பேத்கர் நேருவோடு கருத்து வேறுபாடு கொண்டு ராஜினாமா செய்தார். ஆனால் எக்காரணத்துக்காக அம்பேத்கர் ராஜினாமா செய்தாரோ அந்த இந்து மத சீரமைப்பு மசோதாவை நேரு ச்ட்டமாக்கி காட்டினார். இந்திய பாராளுமன்றத்தில் நேருவுக்கு முக்கியமான எதிர் தரப்பு அரசியல்வாதி விஞ்ஞானியான மேக்னாட் சாஹா. நேருவை சாஹா அணு ஆராய்ச்சித் தொடர்பாக பல முறை எதிர்த்துள்ளார். நேரு சாஹாவின் கேள்விகளால் எர்ச்சலடைந்தாலும் பதில் அளிக்கத் தவறியதேயில்லை (அக்காலத்தில் ஹோமி பாபா, விக்ரம் சாராபாய், பட்நாகர், சாஹா இடையே பெரும் போட்டி நிலவியது. அதெல்லாம் மிகப் பெரிய கதை. அதன் மையக் கதாபாத்திரம் நேரு). 


பூவண்ணன்அவங்க அப்படித்தான்என்று சொல்வதே சாதியச் சொல்லாடல் தான். பிராமணர் யாராவதுஅவங்க அப்படித்தான்என்று சொன்னால் பூவண்ணன் சும்மா விடுவாரா? சமீபத்தில் முதல்வரின் நூல் வெளியீட்டு விழாவில் கூட ஒருவர் முதல்வர் ஸ்டாலினின் பண்புகள்பிறப்பிலேயே வந்ததுஎன்று பேசினார் (அல்லது வேறு விழாவா, நினைவில்லை). “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்என்றால் அதில் பிராமணர்களும் உண்டே? உடனேஅவங்க அப்படி நினைக்கிறார்களாஎன்று கேட்டால்அப்படி நினைப்பவர்கள் பிராமணர்களில் உண்டு. அப்படி நினைக்காத பிராமணரல்லாதாரும் உண்டுஎன்றே சொல்வேன்


சத்தியவாணி முத்து கருணாநிதி பற்றி சொன்ன விமர்சனம் பற்றி பூவண்ணன் பேசும் காணொளிக்காக காத்திருக்கிறேன்


References.


1. https://en.wikipedia.org/wiki/K._R._Narayanan

2. https://en.wikipedia.org/wiki/Indian_Foreign_Service

3. https://en.wikipedia.org/wiki/Jagjivan_Ram

4. https://m.rediff.com/news/jul/24pres.htm

5. https://www.theguardian.com/news/2005/nov/29/guardianobituaries.india

6. Blood on Narayanan https://history.state.gov/historicaldocuments/frus1977-80v19/d194

7. https://www.nationalheraldindia.com/india/a-generous-man-jawahalal-nehru-was-a-fine-human-being

8. https://theprint.in/theprint-profile/kr-narayanan-the-president-who-didnt-hesitate-to-call-a-spade-a-spade/317705/

9. https://www.google.com/books/edition/Images_and_Insights/6rvmNavV3rkC?hl=en&gbpv=1&printsec=frontcover


Thursday, March 10, 2022

Imperfect Heroes and Defeating Hitler: A Brief Survey of World War II and Lessons for Ukraine Conflict

Too often in life we don't get saints to defeat grotesque villains. We often get mere mortals and sometimes villains too who are mere shades better than a more dangerous kind and those compromises save lives, by the thousands and sometimes by the millions. A brief survey of World War II teaches us those very lessons. Those lessons are worth recalling in the context of the humanitarian tragedy unfolding in Ukraine. 

Let us consider the duplicitous claim of Vladimir Putin that he's denazifying Ukraine. In the run up to World War II the only man who was implacably opposed to Adolf Hitler was Winston Churchill. Other than Churchill no leader shared such a loathing of Hitler. Nations and leaders, including Soviet Union, were only too ready to make deals with Hitler, driven by self interest. Charles Lindberg, an American legend, was a cheerleader for the Nazi regime and happily scared the Americans about the prowess of the Luftwaffe. Americans viewed the brewing Nazi threat as a European conflict that Americans need not be bothered about. Anti-semitism and racism was quite rampant in American society and FDR's New Deal, pacified Southern legislators, by encoding racial policies. 

Neville Chamberlain of England is now remembered for his inglorious capitulation to Hitler at Munich. The Western powers happily bartered away Czechoslovakia to appease Hitler thinking that that'd satisfy his bloodlust. Both American and British appeasement of Hitler was largely driven a pathological hatred and fear of Communism. Of course, Lenin and his successor Stalin threatened the world with global communism. Soviet Russia's puppets in Germany did more than their share in enabling the rise of Hitler by antagonizing other players. Non-Communist parties in Germany, like other nation states too, refused any accommodation to Communists. In all this each party had defined its own interest and pursued it blind to any other factor. 

Alarmed by the West appeasing Hitler Soviet Russia's leader Joseph Stalin deputed his foreign minister Molotov to negotiate with Reich's foreign minister Ribbentrop. Called the "Non-Aggression Pact", also called Molotov-Ribbentrop Pact, the treaty secured peace between Germany and Russia. Having secured his Eastern front with a peace pact Hitler attacked Poland on September 1st 1939 and formally launched World War II. Along side the German aggression of Poland another front to the war was opened by Soviet Russia. Stalin and Hitler, it was revealed later had not merely assured each other of peace but also had reached an understanding to plunder Poland together. Also covered by the secret pact was division of Latvia, Estonia, Finland etc between the two nations that were prepared to unleash armies on the unsuspecting nations. While Hitler pulverized Poland from the West, Stalin pummeled it from the East. Is it any wonder that Poland today fears Putin? Per the pact Soviet Russia literally supplied the Nazi army with materiel. Yes, Stalin supplied Hitler's army. So much for Putin's claims of denazifying Ukraine.

Ah yes then there's Winston Churchill, the bull dog warrior. Battling his personal demons, he called them black dogs, Churchill railed against his country's complacency and called upon his nation to defend freedom from Hitler. He mocked tyrants for being afraid of free speech. All this while he cheered his country holding down India and prosecuted 'sedition'. 

Much as Zelensky and Ukraine stand today so did Winston Churchill and his island nation stand alone against Hitler's blitzkrieg. Just as Zelensky is pleading with the West today for arms so did Churchill. FDR, hamstrung by Congress, provided feeble support. Taking office in May 1940 Churchill promised his country that he had nothing to give except "blood, toil, tears and sweat" and cautioned them that they are set to wage war against a "monstrous tyranny never surpassed in the dark and lamentable catalogue of human crimes". Until June 22nd 1941 Churchill and Britain braved Hitler all alone. On June 22nd 1941 Hitler who in his 'Mein Kampf' had laid out clear plans to occupy and exterminate populations in Russia put his desire into action by launching Operation Barbarossa. Then came Pearl Harbor on December 7th 1941. Calling the attack on Pearl Harbor a "day that will live in infamy" Roosevelt declared war against Japan and soon after on Germany too. The world was at war against Hitler and Nazism.

Churchill, together with FDR and Stalin, now formed a triumvirate. An imperial colonialist, a President of a country riven by racism, a totalitarian who had murdered all his colleagues now joined hands against Adolf Hitler. Oh, let's not forget that FDR had also imprisoned Japanese-Americans in concentration camps. 

We are today armed with hindsight and knowledge of the unprecedented killing machine that the Nazi state was and can we even contemplate a Nazified world? Hitler's enemies were not saints but they saved the world. While the allies saved the world from Nazism the post war world carved up by the victorious powers created new contradictions.

Britain had declared war on Germany because Hitler attacked Poland. Yet, in the new world order the Allies negotiated Poland was bartered away to Soviet Russia. Polish Nobel laureate Czeslaw Milosz later bemoaned how easily Poland was given away to Stalin. While the world was rid of Nazism Poland had to wait for another half century to be free. 

The hypocrisies and competing self interests did not stop with merely the division of Europe. Holding war criminals to account had its share of hypocrisies. Nazi generals hauled up before the Nuremberg trials would've wondered if their accusers were saints. They were not but can we even contemplate a world in which the likes of Himmler walked free? Can we contemplate a world where Adolf Eichmann slipped into death aged and shuffling his mortal coil like any other? In a fair world better nations and better human beings would've judged Himmler but can we begrudge the justice that flawed countries delivered. The Nuremberg trials raised and then answered the question of whether illegal orders, orders that were human crimes, could be followed unquestioningly. 

Justice Radhabinod Pal who was part of the Tokyo trials that mirrored the Nuremberg trials that sought to bring Japanese army leadership to justice for war crimes used the argument of whether Allies were saints to prosecute the Japanese to frustrate any attempt to hold the criminals to account. For want of saints to accuse criminals Justice Pal played a key role in letting criminals walk scot free and for that he is fondly remembered in Japan today. General MacArthur, the highest authority of the occupying American force, saw to it, for political expediency and perhaps sagaciously, that the Emperor was shielded from charges of war crimes. Prosecuting the Emperor as a criminal would've devastated the Japanese. So even within the history of Japan I am livid about letting the Generals go but I can understand the shielding of the Emperor. 

Nazism did not die with Hitler it continues to mutate today and societies combat it. Sure a section of Ukrainians may be Neo-Nazis but America too has them, Germany and Hungary have them. The West, led by America, are trying negotiate compromises and doing everything they can to not go to direct conflict with Putin and set in motion World War III. Those compromises include ensuring that Poland's rashness to arm Ukraine does not involve USA lest Putin, justifiably, interpret it as America at war with Russia. 

A geopolitical struggle of this nature is labyrinthine and needs patient reflection and more than a little knowledge of history. Fueled by clips floating on Youtube and WhatsApp and googling for factoids many rush to ask gotcha questions. Of course what is a momentary glee of stroking one's ego on social media is no match for the real humanitarian tragedy that is unfolding in Ukraine. The moral case against Putin's aggression is plain and simple. Holding the forces trying to defend Ukraine to a moral standard that is not applied to Putin only speaks of the illiteracy, wanton or intentional, of such detractors.
Saturday, March 5, 2022

எம்.சி.ராஜாவும் தலித் அரசியல் செயல்பாட்டுக்கு காந்தி கூறிய அறிவுரையும்

காந்தியின் வாழ்க்கை வரலாறுகள் பலவும் பூனா ஒப்பந்தத்தை ஒட்டி அம்பேத்கரையும் தலித் தரப்பு அரசியலையும் பேசுவதோடு கடந்து போய்விடுவன. சமீபத்திய குஹாவின் வாழ்க்கை வரலாற்றில் தான், சம கால விமர்சனங்களை கணக்கில் கொண்டு, அம்பேத்கருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. காந்தியை பற்றி பேசும் பொதுவான இன்றைய காந்தியவாதிகள் பலரும் காந்திக்கும் தலித் தரப்புக்குமான உறவு பற்றி அதிகம் பேசுவதேயில்லை. அவர்களுக்கு கதர், கிராமியம், வயல், புல்வெளி இதெல்லாம் ரொம்ப முக்கியம். தலித் தரப்பை பேசும் போதும் காந்தி-அம்பேத்கர் மோதல் என்கிற மிகச் சிறிய வட்டமே பிரதானம் கொள்கிறது. சஹஜானந்தர் பற்றி காந்தியர்களை விட ஸ்டாலின் ராஜாங்கம் தான் அதிகம் பேசியிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
நீலம் பதிப்பகம் வெளியிட்டுள்ள வே.அலெக்ஸ் தொகுத்த “எம்.சி.ராஜா சிந்தனைகள்” மிக முக்கியமான வரலாற்று ஆவணம். ராஜா-காந்தி-அம்பேத்கர் என்றொரு முக்கோண உறவில் பல சுவாரசியங்களும் மறக்கப்பட்ட வரலாறுகளும் இருக்கின்றன. பூனா ஒப்பந்தத்துக்கு முன் ராஜா காந்தியை விமர்சித்துப் பேசியிருக்கிறார். ஒரு வித ஆதங்கத்துடன் என்றும் சொல்லலாம். காந்தி போன்ற ஒரு செல்வாகுள்ள ஆளுமை தேசிய சுதந்திரத்துக்கு ஈடாக தலித் முன்னேற்றத்தையும் தீண்டாமை ஒழிப்பையும் கைக்கொள்ளலாமே என்கிற ஆதங்கம் இருந்திருக்கிறது. A disappointment too. பூனா ஒப்பந்தம், அரிஜன சேவா சங்கம் நிறுவியது போன்ற செயல்பாடுகள் ராஜாவை காந்தியிடம் ஈர்க்கிறது. அரிஜன சேவா சங்கத்துடன் சேர்ந்து செயல்பட்டிருப்பதாக ராஜா சொல்கிறார்.
“இந்து நாளிதழில் திரு. எம்.சி.ராஜா அரிஜனங்களுக்கு கான்ந்தி கூறிய அறிவுரை (ஏப்ரல் 12 1937)” எனத் தலைப்பிட்ட கட்டுரையில் இருந்து சில பகுதிகள். பேஸ்புக் பதிவென்பதால் மேலதிக தகவலகளை அதிகம் சேர்க்காமல் தருகிறேன். கட்டுரையில் இருக்கும் அக்காலத்திய சொல்லான அரிஜனங்கள் என்பதை அப்படியே எழுதியிருக்கிறேன். வேறு நோக்கமில்லை.
‘அரிஜனங்களும் தேர்தல்களும்’
—————————————-
(அரிஜனங்களின் காலனியில் தங்கியிருந்த காந்தியிடம் 1936 வாக்கில் சந்தித்து வரவிருக்கும் தேர்தலில் அரிஜனங்கள் ஏதேனும் ஒரு பிரதான அரசியல் கட்சியுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டுமா என்று கேட்ட ராஜாவுக்கு காந்தி அளித்த பதில். இடம் கருதி பொருள் மாறாத வகையில் எடிட் செய்திருக்கிறேன்)
“நீங்கல் எந்தவொரு கட்சியுடனும் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளக் கூடாது…. பல்லாண்டு காலமாக நீங்க தாங்கிக் கொண்டிருக்கும் வினோதமான குறைபாடுகள் மாறாமலேயே இருக்கும் பட்சத்தில் இந்தியாவிலுள்ள மிக முற்போக்கான கட்சி உட்பட வேறெந்தவொரு கட்சியுடனும் நீங்களே உங்களை அடையாளப் படுத்திக் கொள்ள வேண்டுமென்று நான் எதிர்ப்பார்க்க போவதில்லை. அரசாங்கத்தால் தரப்படும் எதையும் நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் ஆனால் உங்களுடைய சுய மரியாதையை நீங்கள் தியாகம் செய்யவேக் கூடாது. மதுவிலக்கு, உப்புவரி ஒழிப்பு போன்ற காங்கிரஸ் கட்சியின் திட்டங்களில் உள்ள நல்லவைகளை நீங்கள் ஆதரிக்கலாம். ஆனால் ஏழை இந்தியாவிலிருந்து எந்த வகையிலும் அரிஜனங்கள் தனிமைப்ப்படுத்தப்படுவதை நீங்கள் ஒப்புக் கொள்ளவே கூடாது. இந்தியாவின் நலன்களும் உங்களுடைய நலன்களும் ஒன்றோடு ஒன்று இணைந்தே உள்ளன”.
ராஜா எழுதுகிறார், “அரசியல் கட்சி என்ற முறையில் காங்கிரஸ் கட்சிக்கு உடனடி ஆதாயம் பெற்றுத்தரும் எந்தவொரு சிந்தனையுமில்லாமல் முழுக்க முழுக்க அரிஜனங்களின் நலன்களை கருத்தில் கொண்டே திரு. காந்தி தந்த உன்னதமான அறிவுரை இத்தகையதாகவே அமைந்திருந்தது.
‘காங்கிரஸ் சிந்தனைகள்’
———————————-
(தேர்தல் சமயத்தில் தமிழக காங்கிரஸ் தலைமை அட்டவணைச் சாதி வேட்பாளர்களுக்கு எதிராக வேட்பாளர்கள் நிறுத்திய போது ராஜா காந்திக்கு மேலே சொன்ன அறிவுரை 1937-இலும் பொருந்துமா என்று எழுதி கேட்கிறார். காந்தி ஆமாம் என்கிறார். அப்புறம் காந்தி, ராஜா, தமிழக காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோரிடையே கடித பரிமாற்றம் நிகழ்கிறது. அதனை தொடர்ந்து சத்தியமூர்த்தி காங்கிரஸ் வேட்பாளர்களாக நிற்க விரும்பும் அட்டவணைச் சாதியினர் கருத்தில் கொள்ள வேண்டிய நிபந்தனைகளை அறிக்கையாகவே வெளியிடுகிறார். கவனிக்கவும் இது காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் அட்டவணை வேட்பாளர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கும் நிபந்தனைகள். இடம் கருதி பொருள் மாறாத வகையில் எடிட் செய்திருக்கிறேன்)
“1. அரசுடன் ஒத்துழையாதிருக்கும் எந்த திட்டமும் சட்டப் பேரவைகளை புறக்கணிக்கும் திட்டமும் காங்கிரஸ் மேற்கொள்ளுகையில் அத்தகைய தீர்மானங்களின்படி செயல்பட விரும்பாத சூழ்நிலையில் அவை அரிஜனங்களைக் கட்டுப்படுத்துவதில்லை.
2. கட்சியின் ஏற்கப்பட்ட கொள்கையிலிருந்து வேறுபடும் போது அரிஜன சமுதாயத்தின் நலன்களைப் பாதிக்கும் விஷயங்களில் கருத்துகளைச் சொல்வதற்கும் சுயமாகவே வாக்களிப்பதற்கும் காங்கிரஸ் கட்சியிலுள்ள அரிஜன உறுப்பினர்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு”
என் கருத்து
——————
இக்கட்டுரையின் ஆரம்பத்திலேயே தான் நீதிக் கட்சியை சேர்ந்தவனல்ல என்றும் அக்கட்ட்சி வேட்பாளரை தோற்கடித்தே வென்றதாகவும் சொல்லும் ராஜா, திவான் பகதூர் ஆர். சீனிவாசனுடன் இணைந்து ‘அட்டவணைச் சாதிகளின்’ கட்சியை உருவாக்க முணைந்ததையும் அத்தகையக கட்சியின் கொள்கையை “‘ஒத்துழைப்பு’ எனும் ஒரே சொல்லால் வெளிப்படுத்தலாம்” என்கிறார். அதாவது மக்கள் நலனுக்காக யார் எதனை முன்னெடுத்தாலும் தன் கட்சி ஒத்துழைப்பு நல்கும் என்கிறார். அதையே தான் காந்தியும் எதிர்ப்பார்த்தார். பிற்காலத்தில் 90-களில் கூட்டணி ஆட்சிகள் மத்தியில் நிலைப்பெற்ற போது “Common Minimum Program” என்கிற சொல்லாடல் பிறந்தது. ஆனால் அதற்கு அரை நூற்றாண்டு முன்பே காந்தியும், ராஜாவும் அதை செயல்படுத்தியிருக்கிறார்கள்.
சம கால அரசியலோடு காந்தி, காங்கிரஸ், தலித் தரப்பின் செயல்பாடுகளை ஒப்பிட்டால் அக்கால அரசியல் தெளிவும் ஓவ்வொரு தரப்பின் பெருந்தன்மையும், அநேக குறைகளையும் தாண்டி, சிந்தனை தெளிவும் பிரம்மிக்க வைப்பது.
இப்பதிவு ஏதோ ராஜா காந்தியையும் காந்திய இயக்கத்தையும் தலையில் வைத்துக் கொண்டாடினார் என்று நிறுவும் முயற்சியல்ல. இன்னும் சொல்லப் போனால் ராஜாவுக்கு தமிழக காங்கிரஸ் அமைப்பின் மீதான நம்பிக்கையை விட காந்தியின் மீது நம்பிக்கை இருக்கிறது. காந்தியையும் ராஜா விமர்சிக்க தவறவில்லை.
ராஜா-அம்பேத்கர்-மூஞ்சே ஒப்பந்தம் மிக முக்கியமான ஒப்பந்தம். பூனா ஒப்பந்ததுக்கு நிகராக விவாதிக்கப்பட வேண்டியது. அது தொடர்பாக ராஜா எழுதிய கடிதங்கள் அபாரம்.
எம்.சி.ராஜாவின் வரலாற்றை முன் வைத்து காந்தியின் வரலாற்றையும், அக்கால நிகழ்வுகளின் சூழலையும் புரிந்துக் கொள்ள முயல்வது அத்தியாவசியமான முயற்சி.

(பேஸ்புக் பதிவு சுட்டி https://www.facebook.com/arvindkannaiyan/posts/10220277305502400 )